லக்னோ: உத்தரபிரதேசத்தின் 9 பேரவை தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து மாயாவதி நேற்று கூறுகையில், “முன்பு வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட்டபோது முறைகேடு, மோசடியாக போலி வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி போலி வாக்குகள் போடப்பட்டன.
தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி அதேபோன்ற மோசடிகள் நடக்கின்றன. இது ஜனநாயகத்தின் மீது அக்கறையுள்ளவர்களுக்கு ஆழ்ந்த வேதனை தருகிறது. இந்த சூழலில் போலி வாக்குப்பதிவுகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்வரை நாடு முழுவதும், குறிப்பாக உத்தரபிரதேசத்தில் நடக்கும் எந்தவொரு இடைத்தேர்தலிலும் பகுஜன் சமாஜ் போட்டியிடாது’’ என்றார்.
The post வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு இனி இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் போட்டியிடாது: மாயாவதி திட்டவட்டம் appeared first on Dinakaran.