வருசநாடு அருகே பாலத்தில் சீரமைப்பு பணிகள் அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை

1 week ago 6

 

வருசநாடு, செப். 13: வருசநாடு அருகே முருக்கோடை-ராயர்கோட்டை இடையே மூல வைகை ஆற்றின் குறுக்கே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது வரை எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைய தொடங்கியது. குறிப்பாக பாலத்தின் கீழ்ப்பகுதியில் தூண்கள் அமைந்துள்ள இடத்தில் சிமெண்ட் பகுதி உடைய தொடங்கியது.

இதனை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததை தொடர்ந்து தற்போது சிமெண்ட் பகுதி அதிக அளவில் சேதமடைந்து மண் அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. அடுத்து தொடங்க உள்ள பருவமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதுகுறித்து ராயர்கோட்டை சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில், ‘மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மண்ணரிப்பு அதிகமாகி பாலத்தின் தூண்பகுதி சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

The post வருசநாடு அருகே பாலத்தில் சீரமைப்பு பணிகள் அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article