1. சுண்டக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம் வகைக்கு தலா 5 கிராம், மிளகு, சுக்குப்பொடி வகைக்கு 2 கிராம், பெருங்காயம் - அரை டீஸ்பூன், பொடித்த இந்துப்பு - 1கிராம் ஆகியவற்றை வறுத்துப் பொடித்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும். சூடான சாதத்தில் நெய்விட்டுப் பிசைந்து சாப்பிட வயிற்று உப்பிசம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், வாயுத் தொல்லைகள் மெல்ல மெல்லச் சரியாகும்.
2. சீரகம், ஏலக்காய், சோம்பு, ஓமம் போன்றவற்றை சம அளவில் எடுத்துப் பொடித்து தேவையான போது, அரை டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்து வர, ஏப்பம், வயிற்றுப்பிசம், வயிற்றுப் பொருமல் பிரச்சினைக்கு நல்ல பலனை தரும்..
3. சீரகம், ஓமம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை இலைகளைத் தனித்தனியாக வறுத்துப் பொடித்து, அதனுடன் பூண்டினை நெய்விட்டுத் தனியாக வறுத்து அனைத்தையும் பொடித்து, சாதத்துடன் இந்துப்புச் சேர்த்து மோர்விட்டுப் பிசைந்து சாப்பிட்டு வரலாம்.
4. மோருடன் வறுத்த பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், சுக்குத்தூள் சிறிதளவு வீதம் கலந்து உப்பிட்டுப் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
5. சித்த மருத்துவத்தில் ஓமத்தீநீர் , பிரண்டை வடகம், சுண்டைவற்றல் சூரணம், ஏலாதி சூரணம்,அட்டாதி சூரணம், சீரக வில்வாதி லேகியம், வில்வாதி லேகியம், குன்ம குடோரி மெழுகு போன்ற மருந்துகள் உள்ளன. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.
வயிற்றுப் பொருமல், வயிற்றுப்பிசம், வாயுத் தொல்லைகளைத் தடுப்பதற்கான ஆலோசனைகள்:
1. எப்போதும் தண்ணீரை அண்ணாந்த நிலையில் குடிக்காமல், வாய்வைத்து அருந்த வேண்டும்
2. உணவு சாப்பிடுவதில் நேரம் தவறாமையைக் கட்டாயம் கடைபிடித்தல் வேண்டும்.
3. உணவை வேகமாகவோ அல்லது பேசிக்கொண்டோ உண்ணக்கூடாது.
4. வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தல் வேண்டும்.
5. உணவில் பெருங்காயம், மிளகு, சுக்கு, பூண்டு, சீரகம், கொத்தமல்லி போன்றவற்றை பயன்படுத்துதல் வேண்டும்.