வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

1 month ago 7

சிவகாசி, நவ.19: வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88வது நினைவு நாளான நேற்று சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல்லில் உள்ள அவரது சிலைக்கு சிவகாசி மாநகர திமுக செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியின் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநகர பகுதி கழக செயலாளர் அ.செல்வம், திருத்தங்கல் முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல், மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் குருசாமி, மாநகர கவுன்சிலர் சேதுராமன், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பலராம், கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி செயலாளர் சுபாஷினி, மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமிநாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், அம்மா பேரவை கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article