லோடு ஆட்டோவுக்கு தீ வைத்த சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

1 month ago 5

பெரம்பூர்: அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கண்ணன் (50). இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை குடியிருப்பு பகுதியில் நிறுத்திய போது மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. போலீசார் விசாரித்த போது அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி தெரு பகுதியை சேர்ந்த தீபக் (20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் ஆட்டோவை கொளுத்தியது தெரிய வந்தது. கடந்த 15ம் தேதி லோடு ஆட்டோ டிரைவர் கண்ணனின் மகன் மணிகண்டன், கைதான சிறுவர்களை அடித்துள்ளார். அந்த ஆத்திரத்தில் அவனது தந்தையின் லோடு ஆட்டோவை கொளுத்தியதாக கூறியுள்ளனர். இதையடுத்து தீபக் மீது வழக்கு பதிவு செய்து அயனாவரம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 5 சிறுவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

The post லோடு ஆட்டோவுக்கு தீ வைத்த சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article