மும்பை: குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி, இந்தியாவில் சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தத்தை பெற அதிகாரிகளுக்கு ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை பெற்றதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய அதிபராக பதவியேற்க உள்ள டிரம்பின் குடியரசு கட்சி மூத்த எம்பி லான்ஸ் குடன், அந்நாட்டு நீதித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி நேற்று மும்பையில் பேட்டி அளித்த போது, அதானி வழக்கு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘ என்னிடம் எந்த கருத்தும் இல்லை. நாங்கள் அரசியலில் இருந்து வேறுபட்ட வெளிப்படையான சுயாதீனமான நீதி அமைப்பை கொண்டுள்ளோம். இது மற்ற நாடுகளை விட வித்தியாசமானது ’’ என்றார்.
The post லஞ்சப் புகார் தொடர்பான அதானி வழக்கு குறித்து அமெரிக்க தூதர் கப்சிப் appeared first on Dinakaran.