ரூ.50000 கோயில் மணி திருட்டு

3 weeks ago 4

உசிலம்பட்டி, அக். 22: உசிலம்பட்டி அருகே உள்ள குப்பனம்பட்டி கிராமத்தில் கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அதிக எண்ணிக்கையில் மணிகள் கட்டப்படுவது வழக்கம். இந்நிலையில் கோயிலில் பக்தர்கள் தரப்பில் கட்டப்பட்டு இருந்த 5 கிலோ எடையுள்ள பத்து மணிகளும், 3 கிலோ மணி பத்து மணிகளும் என, மொத்தம் 20 மணிகள் திருடுபோனது தெரிவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது. மணிகள் திருட்டு குறித்து கோயில் பூசாரி பால்சாமி உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த, கோயில் மணிகளை ஒட்டுமொத்தமாக திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post ரூ.50000 கோயில் மணி திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article