ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எப்போதும் உலகத்தரம் வாய்ந்தது - பில் சால்ட்

2 hours ago 1

லண்டன்,

18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் 2 நாள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

இதில் இங்கிலாந்து வீரரான பில் சால்ட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 11.50 கோடிக்கு வாங்கியது. கடந்த சீசனில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியில் பில் சால்ட் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மீது தமக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதாக பில் சால்ட் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாடாத காலங்களில் பெங்களூரு அணியின் ஆட்டத்தை இங்கிலாந்தில் தொலைக்காட்சியில் பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கோலி, கெயில், டீ வில்லியர்ஸ் போன்ற வீரர்களுடன் பெங்களூருவின் பேட்டிங் எப்போதும் உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி மீது எனக்கு அளவு கடந்த மரியாதை இருக்கிறது. அவருக்கு எதிராக விளையாடிய போதே அவருடன் பேசி சிரித்து நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டேன். எனவே தற்போது அவருடன் விளையாடுவதற்காக நான் அவருடன் காத்திருக்கிறேன். களத்திற்கு சென்று அதிரடியாக விளையாட வேண்டும் என்ற தெளிவான வழியை பெங்களூரு அணி கொண்டுள்ளது. அவர்கள் எப்போதும் நெருப்பான குணமுள்ளவர்களை கொண்டுள்ளார்கள்.

அவர்களுடைய பேட்டிங் வரிசை எப்போதும் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும். சில வருடங்களுக்கு முன்பாகவே ஐபிஎல் தொடரை நான் பார்க்கும்போது அவர்கள் விளையாடுவதை தொலைக்காட்சியில் பார்ப்பேன். தற்போது அவர்கள் அணியில் ஆண்டி பிளவர் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களுடைய தலைமையில் நான் விளையாடுவதற்காக காத்திருக்கிறேன். நாங்கள் ஒரே மாதிரியாக சிந்திக்கக் கூடியவர்கள் என்பது எனக்கு தெரியும்" என்று கூறினார்.

Read Entire Article