ரஷியா, பெலாரசை மீண்டும் சேர்க்க வேண்டாம் - மேக்னஸ் கார்ல்சென்

2 hours ago 3

புடாபெஸ்ட்,

உலகின் முன்னணி செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சென் கடந்த 26ம் தேதி புடாபெஸ்டில் நடந்த ஒரு சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு கடந்த 100 ஆண்டுகளில் மிகச்சிறந்த சதுரங்க வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை ரஷியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) தற்போதைய தலைவருமான ஆர்கடி டிவோர்கோவிச்சின் கைகளில் இருந்து அவர் வாங்கினார்.

இந்த விழாவில் அவர் பேசும்போது, சுறுசுறுப்பான வீரராக இருக்கும்போதே இந்த விருதைப் பெறுவதை விசித்திரமாக உணர்கிறேன். தற்போது, வியட்நாமுக்கு எதிரான நார்வேயின் ஆட்டத்திற்காக (நான்) அதிக கவனம் கொண்டுள்ளேன். இந்த விருதைப் பெறுவதில் நான் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனால் எனது தனிப்பட்ட கருத்துப்படி, கேரி காஸ்பரோவ் (ரஷிய செஸ் கிராண்ட்மாஸ்டர்) என்னை விட சிறந்தவர் என்று நான் நினைக்கிறேன். எனக்கு ஏன் இந்த விருது கிடைத்தது என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் அவர் இன்னும் தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன்.

ரஷிய மற்றும் பெலாரசிய சதுரங்கக் கூட்டமைப்புகளை விளையாட்டு அமைப்பில் மீண்டும் சேர்ப்பதற்கு எதிராக ஆலோசனை வழங்குவதற்கான வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். அதனால் நானும் அதைத்தான் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

உக்ரைன் மீதான போரின் விளைவாக ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகள் சர்வதேச செஸ் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டன. மேலும், உலக செஸ் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தடை செய்திருந்தது.

இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பில் (FIDE) இந்த வார இறுதியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை விளையாட்டு அமைப்பில் மீண்டும் சேர்க்கும் திட்டத்தை ஏற்க வேண்டுமா என்று அதன் பொதுச் சபையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article