ரயில்வேயில் 3115 இடங்கள்

1 month ago 9

பயிற்சி: Trade Apprentice.
மொத்த காலியிடங்கள்: 3115. வயது: 23.10.2024 தேதியின்படி 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்:Electrician/Plumber/Welder (Gas & Electric)/Diesel Mechanic/Machinist/Turner/Carpenter/ PSAA/Electronic Mechanic/Sheet Metal Worker/ Machine Tool Maintenance Mechanic/ COPA/Blacksmith/Wire man/Fitter/AC Mechanic/ DSL Fitter/ Lineman.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹100 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.www.rrcer.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:23.10.2024.

The post ரயில்வேயில் 3115 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article