ஆவடி: கடந்த சில மாதங்களாக ரயில் பயணிகளிடமிருந்து செல்போன், நகை, விலை உயர்ந்த பொருட்கள், உடைமைகள் தொடர்ந்து திருட்டு போவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து ஆவடி, அம்பத்தூர் மாம்பலம், கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க ரயில்வே காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஆவடி ரயில்வே காவல் ஆய்வாளர் பத்மநாபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் எஸ்.ஆறுமுகம் மற்றும் காவலர்கள் குற்ற சம்பவங்கள் நடந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கடந்த 12ம் தேதி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரகுமான் (28), கொடுங்கையூர் ஆர்.வி.நகர் பகுதியை சேர்ந்த லகும்பல் அக்கீம் (26) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (28) ஆகிய மூவரையும் கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதால் அவர்களிடமிருந்து 3 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ரயில் பயணிகளிடம் திருடிய 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.