யுபிஎஸ்சி- ஜியோ சயின்டிஸ்ட் தேர்வு அறிவிப்பு

1 day ago 3

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் ஜியோ- சயின்டிஸ்ட் தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு: Combined Geo Scientist Examination- 2025.
மொத்த காலியிடங்கள்: 85.
Geologist- 16, Geophysicist-6, Chemist-2, Scientist ‘B’ (Hydrology)-13, Scientist ‘B’ (Chemical)-1, Scientist ‘B’ (Geophysics)- 1, Assistant Hydrogeologist-31, Assistant Chemist-4, Assistant Geophysicst-11.
வயது வரம்பு: 01.01. 2025 தேதியின்படி 21 முதல் 32க்குள்.

தகுதி: 1. Geologist: Geological Science/Geology/Applied Geology/ Marine Geology/Earth Science/Oceanography/Geo physics பாடப்பிரிவுகள் அல்லது Geo exploration/Mineral Exploration/Engineering Geology ஆகிய ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டம்.

2. Geophysics: Physics/Applied Geo Physics/ Marine Geophysics பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் எம்எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. Chemist: Applied Chemistry/Analytical Chemistry பாடத்தில் எம்எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. Scientist ‘B’: Geology/Applied Geology/Marine Geology/ Hydrology ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
யுபிஎஸ்சியால் நடத்தப்படும் Combined Geo-Scientist Exam மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். முதற்கட்ட தேர்வு 2025ம் ஆண்டு பிப்.9ம் தேதி பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம் ஆகிய மையங்களிலும், இரண்டாம் கட்ட தேர்வு 2025ம் ஆண்டு ஜூன் 21ம் தேதியும் நடைபெறும்.எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் பற்றிய விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.200/- மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2024.

The post யுபிஎஸ்சி- ஜியோ சயின்டிஸ்ட் தேர்வு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article