சென்னை,
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஏற்க மறுப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இந்த தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
தனித் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.