மேட்டூர்: மேட்டூர் அருகே உத்தர பிரதேச சுற்றுலாப் பயணிகள் மற்றும் போலீஸ் இடையை ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 3 போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 3 போலீஸாரையும் சஸ்பென்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்யராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேர் சொகுசு பேருந்தில் 35 நாட்கள் ஆன்மிக சுற்றுலா வந்தனர். தமிழகத்தில் காஞ்சி, ஸ்ரீரங்கம், ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களை பார்வையிட்டனர். பின்னர், கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு தமிழக எல்லையான மேட்டூர் காரைக்காடு சோதனைச் சாவடி வழியாக கடந்த வெள்ளிக்கிழமை (27-ம் தேதி) சென்றனர். அப்போது காரைக்காடு மதுவிலக்கு சோதனைச் சாவடியில் போலீஸார் சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.