சென்னை: மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என தமிழக டிஜிபி-க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சிக்கான போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளாத சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் எஸ்.கே.சாமி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்திருந்தார்.