மூணாறு குப்பை சேமிப்பு கிடங்கில் ஒற்றைக் கொம்பன் யானை திடீர் விசிட்: தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்

1 month ago 6

மூணாறு: மூணாறு அருகே குப்பை சேமிப்புக் கிடங்கிற்கு, ஒற்றைக் கொம்பன் யானை திடீரென சென்றதால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் திடீர், திடீரென உலா வந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கு படையப்பா என்ற ஆண் யானை, ஒரே தந்தத்துடன் திரியும் ஒற்றைக் கொம்பன் யானை ஆகியவை அடிக்கடி ஊருக்குள் வந்து பொதுமக்களை கலங்கடித்து வருகிறது. கடைகளை உடைத்து தள்ளுவதுடன் பொருட்களை தின்று தீர்க்கிறது. விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.

இந்நிலையில், மூணாறு அருகே, கல்லார் எஸ்டேட் செல்லும் சாலையில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் நேற்று முன்தினம் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குப்பையை தரம் பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒற்றைக் கொம்பன் யானை வந்தது. இதைப் பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். தரம் பிரித்து சாக்குப் பைகளில் கட்டி வைத்திருந்த குப்பையை ஒற்றைக் கொம்பன் யானை தூக்கி வீசியது. இது குறித்து வனத்துறைக்கு தொழிலாளர்கள் தகவல் அளித்தனர். அவர்கள் குப்பை சேமிப்பு கிடங்கிற்கு வந்து பட்டாசுகள் வெடித்து யானையை விரட்டினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

The post மூணாறு குப்பை சேமிப்பு கிடங்கில் ஒற்றைக் கொம்பன் யானை திடீர் விசிட்: தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article