முதல் டெஸ்ட்: வில்லியம்சன் அரைசதம்.. முதல் நாளில் நியூசிலாந்து 319 ரன்கள் குவிப்பு

2 hours ago 1

கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன கான்வே 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன கேப்டன் டாம் லதாம் உடன் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் பொறுப்புடன் விளையாடி அணியை முன்னெடுத்து சென்றனர்.

நிலைத்து விளையாடிய இந்த ஜோடியை பிரைடன் கார்ஸ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் லதாம் 47 ரன்களில் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ரச்சின் ரவீந்திரா 34 ரன்களிலும், டேரில் மிட்செல் 18 ரன்களிலும், டாம் பிளண்டல் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் வில்லியம்சன் நிலைத்து விளையாடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் குவித்துள்ளது. கிளென் பிலிப்ஸ் 41 ரன்களுடனும், டிம் சவுதி 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளும், கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளனர்.

New Zealand fight despite losing wickets at regular intervals.#WTC25 | #NZvENG : https://t.co/6ixZcrVk7M pic.twitter.com/V6tlf9IoMi

— ICC (@ICC) November 28, 2024

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

Read Entire Article