முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆதிதிராவிட விவசாயிகள் விதை பண்ணை அமைக்க கலெக்டர் அழைப்பு

1 week ago 8

 

திருவாரூர், செப்.11: திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் விதை பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெறலாம் என கலெக்டர் இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி, கோடை பருவங்களில் நெல் விதைப்பண்ணை அமைத்திட 670 ஹெக்டேர் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டு, ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து வழங்கப்படும் கருவிதைகள் மற்றும் ஆதாரநிலை விதைகளை முன்னோடி விவசாயிகளுக்கும், ஆர்வமுள்ள விவசாயிகளுக்கும் வழங்கி, அதன்மூலம் விதைப்பண்ணை அமைத்து சான்றுநிலை விதைகளாக வேளாண்மைத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

விதைப்பண்ணை அமைப்பதன் மூலம் கூடுதல் லாபம் பெற இயலும். மேலும் தரமான விதைகளை உற்பத்தி செய்வதன் மூலம் உற்பத்தி திறன் அதிகரித்து விவசாயிகள் அதிகமான லாபம் பெற முடியும். எனவே மாவட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதி வட்டார உதவி விதை அலுவலரை தொடர்பு கொண்டு விதைப்பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆதிதிராவிட விவசாயிகள் விதை பண்ணை அமைக்க கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article