முதலமைச்சர் கோப்பை விளையாட்டு பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் தொடக்கம்

1 week ago 5

நாகர்கோவில் : முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10ம் தேதி நாகர்கோவில் அண்ணாவிளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. தடகளம், சிலம்பம், கூடைப்பந்து, வாலிபால், நீச்சல், மேஜைபந்து, கபடி, செஸ், கேரம், கோகோ, கால்பந்து, இறகுபந்து , ஹாக்கி , கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் பெரும்பாலும் முடிந்துள்ளது. நேற்று பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் தொடங்கின. வாலிபால் , ஹாக்கி, இறகுபந்து, செஸ், கேரம் போட்டிகள் தொடங்கியது. வாலிபால் போட்டியில் வெட்டூர்ணிமடம் அலோசியல் மேல்நிலைப்பள்ளி முதல்பரிசும், அண்ணாவிளையாட்டு மைதானம் விடுதி மாணவிகள் 2ம் பரிசும், திருவட்டார் அருணாசலம் பள்ளி 3ம் பரிசும் பெற்றது.

மாணவர்களுக்கான இறகுபந்து போட்டி ஒற்றையர் பிரிவில் கருங்கல் பெத்லகேம் மெட்ரிக் பள்ளி மாணவர் வீனஸ் முதல்பரிசும், ஸ்கேடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் விஸ்வஆனந்த் 2ம் பரிசும், குளச்சல் ஓரியன் மெட்ரிக் பள்ளி மாணவர் முகமது ஷரிப் 3ம் பரிசும் பெற்றனர்.

இரட்டையர் பிரிவில் கோணம் கேந்திரியவித்யாலயா பள்ளி மாணவர்கள் மான்சியர் டிவின்க், மாதவ் ஆகியோர் முதல்பரிசும், ஆதர்ஸ் வித்யாகேந்திரா பள்ளி மாணவர்கள் விகாஷ்குமார், விபினேஷ்குமார் 2ம் பரிசும், அம்மாண்டிவிளை ஆதித்யா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சேம் டேவிட், சரவணகார்த்தி ஆகியோர் 3ம் பரிசும் பெற்றனர்.

மாணவிகள் ஒன்றையர் பிரிவில் கோட்டார் கவிமணி பள்ளி மாணவி நேகா முதல்பரிசும், இவான்ஸ்பள்ளி மாணவி ஹர்ஷனா 2ம் பரிசும், மாடதட்டுவிளை புனித லாரன்ஸ் பள்ளி மாணவி ராயா 3ம்பரிசையும் பெற்றனர். போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கில் பரிசு தொகை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் முடிந்தவுடன் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நடக்க இருக்கிறது.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article