முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

1 day ago 1

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி பிருந்தா தேவி (வயது 33). இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர் பிருந்தா தேவியிடம் முகவரி கேட்டுக்கொண்டிந்தார்.

அதற்கு பிருந்தா தேவி பதில் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்த ஆசாமி திடீரென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். அப்போதுதான் அந்த ஆசாமி முகவரி கேட்க வரவில்லை என்றும் முகவரி கேட்பது போல் நடித்து நகையை பறிக்க வந்த ஆசாமி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிருந்தா தேவி திருடன், திருடன் என்று கூச்சல் போடவும் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அந்த ஆசாமியை துரத்தி சென்றனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை.

இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் அமைந்துள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read Entire Article