முகமது சிராஜ், டிராவிஸ் ஹெட் இருவருக்கும் அபராதம் விதித்த ஐ.சி.சி - எவ்வளவு தெரியுமா..?

1 month ago 6

துபாய்,

இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் (140 ரன்கள்) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியின் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது சிறப்பாக விளையாடி கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றிய சிராஜ் அதனை ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார். மேலும் அவரை நோக்கி "வெளியே செல்லுங்கள்" என்ற வகையில் சைகை செய்தார். இதனால் அவர்களுக்குள் சிறிது மோதல் ஏற்பட்டது.

அதன் பின் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் "நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள்" என்றுதான் சிராஜிடம் தாம் சொன்னதாக டிராவிஸ் ஹெட் கூறினார். ஆனால் அதை சிராஜ் வேறு விதமாக புரிந்து கொண்டு அப்படி செய்தது ஏமாற்றத்தைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த சூழ்நிலையில் விக்கெட்டை எடுத்தபோது வெறித்தனமாக கொண்டாடிய தம்மிடம் ஹெட் சில மோசமான வார்த்தைகளை சொன்னதாக முகமது சிராஜ் தெரிவித்தார். அந்த சூழலில் நேற்றைய ஆட்ட நேரத்தில் பேட்டிங் செய்ய வந்த சிராஜ், பீல்டிங் செய்து கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டிடம் நட்பாக சில வார்த்தைகளை பேசினார். இறுதியில் போட்டியின் முடிவிலும் இருவரும் கை கொடுத்து புன்னகையான முகத்துடன் சென்று மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. விதிமுறைகளை மீறும் வகையில் இருவரும் செயல்பட்டதால் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், ஐ.சி.சி நடத்தை விதி மீறியதாக சிராஜுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர், வீரர் ஆதரவு பணியாளர்கள், நடுவர் அல்லது மேட்ச் ரெப்ரியை துஷ்பிரயோகம் செய்தல்" தொடர்பான ஐ.சி.சி நடத்தை விதிகள் மற்றும் வீரர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்களுக்கான விதி 2.13ஐ மீறியதற்காகவும் ஹெட்க்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

சிராஜ் மற்றும் ஹெட் ஆகியோர் தலா ஒரு டிமெரிட் புள்ளியைப் பெற்றனர். இது கடந்த 24 மாதங்களுக்குள் அவர்கள் செய்த முதல் குற்றமாகும். இரு வீரர்களும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலே முன்மொழிந்த தடைகளை ஏற்றுக்கொண்டனர்.


Mohammed Siraj and Travis Head have been penalised following their on-field incident during the second Test in Adelaide #WTC25 | #AUSvIND | Full details https://t.co/IaRloqCln2

— ICC (@ICC) December 9, 2024

Read Entire Article