மீண்டும் விவாதம்... ஓகே சொன்ன கமலா ஹாரிஸ் - பின்வாங்கிய டிரம்ப்

2 hours ago 2

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான முதல் நேரடி விவாதம் கடந்த 10-ந் தேதி நடந்தது. பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையில் அனல்பறக்கும் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தனர்.

இதனிடையே சி.என்.என். தொலைக்காட்சி விடுத்த அழைப்பை ஏற்று வரும் அக்டோபர் 23-ந்தேதி கமலா ஹாரிஸ் மீண்டும் டொனால்ட் டிரம்புடன் விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த விவாதத்தில் டிரம்ப் பங்கேற்பார் என தாம் நம்புவதாகவும் கமலா ஹாரிஸ் சமூகவலை தள பதிவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் விவாதத்தில் பங்கேற்கமாட்டேன் என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன்படி "நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர்கள் தயாராகி விட்டனர். இரண்டாவது விவாதம் மிகவும் தாமதமாகிவிட்டது" என்று கூறியுள்ள டிரம்ப் அழைப்பை நிராகரித்துள்ளார்.

Read Entire Article