மாமனாருடன் தகாத உறவு.. மருமகளை கண்டித்த மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்

2 hours ago 2

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகர் பகுதியைச் சேர்ந்தவர் கீதா தேவி (50). இவரது மகன் தீபக். கீதா தேவியின் கணவர் குர்கு யாதவிற்கும் மருமகளுக்கும், அதாவது தீபக்கின் மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகாத உறவு இருந்து வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு (கீதா தேவி) மாமியார் வெளியே சென்றிருந்த நிலையில் மாமனாரும் மருமகளும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வெளியே சென்று இருந்த கீதா தேவி வீட்டிற்கு வந்தார். தனது மருமகளை தேடிக் கொண்டிருந்த போது அவர் தனது கணவருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டார்.

உடனே அதிர்ச்சி அடைந்த அவர் இருவரையும் கையும் களவுமாக பிடித்துவிட்டார். அப்போது இருவரும் கீதாவுடன் சண்டையிட்டனர். இதையடுத்து நடந்தவற்றை மகனிடம் கூறப்போவதாக கீதா தேவி கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தீபக்கிடம் சொல்லாமல் இருக்கும் வகையில், கீதா தேவியை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி மாமியார் தலையில் மருமகள் செங்கல், மரக்கட்டைகளால் தாக்கி கொடூரமாக கொலை செய்தாக கூறப்படுகிறது. கொலையை மறைக்க மாமியாரின் சடலத்தை வீட்டின் கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு இருவரும் கீதாவை காணவில்லை என நீலிக் கண்ணீர் வடித்துள்ளனர்.

இந்த கள்ளக்காதல் ஜோடி இருவரும் சேர்ந்து கீதா தேவி மீது களங்கத்தை ஏற்படுத்தியது. தீபக், வந்து அம்மா எங்கே என கேட்ட போது, மாமனாரும் மருமகளும் சேர்ந்து நாங்கள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் யாரோ ஒருவருடன் பைக்கில் சென்றுவிட்டார் என ஒப்பாரி வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தீபக், தனது தாயை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வீட்டில் சோதனை நடத்திய போது கழிப்பறைக்குள் இருந்த கீதா தேவியின் சடலத்தை மீட்டனர்.

தலையில் பலத்த காயங்களுடன் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மாமனார், மருமகள், தீபக் ஆகியோரை அழைத்து தனித்தனியாக விசாரித்தனர். அப்போதுதான் மாமியாரை கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையை தாக்கு பிடிக்க முடியாமல் மாமனாரும் மருமகளும் சேர்ந்து உண்மையை போலீசாரிடம் ஒப்புக்கொண்டுவிட்டனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read Entire Article