
புதுடெல்லி,
லண்டனை சேர்ந்த சர்வதேச உயர் கல்வி ஆலோசனை நிறுவனமான 'கியூ.எஸ்.' மாணவர்களுக்கான உயர் கல்விக்கு சிறந்த நகரங்கள் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில், 2½ லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள்தொகையுடனும், உலக தரவரிசை பட்டியலில் குறைந்தபட்சம் 2 பல்கலைக்கழகங்களுடனும் உள்ள 150 நகரங்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
சுமார் 1 லட்சம்பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில், முதல் 130 இடங்களுக்குள் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 4 நகரங்களும் முந்தைய ஆண்டை விட பல இடங்கள் முன்னேறி உள்ளன. மும்பை, 15 இடங்கள் முன்னேறி 98-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி, 7 இடங்கள் முன்னேறி 104-வது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு 22 இடங்கள் முன்னேறி 108-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை, 12 இடங்கள் முன்னேறி, 128-வது இடத்தை பிடித்துள்ளது. டர்ந்து 6 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த லண்டன், 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தென்கொரிய தலைநகர் சியோல், முதல் இடத்தை பிடித்துள்ளது.