‘மழை நிவாரணம் ஃப்ரம் ஹோம்’ - விமர்சனங்களை கவனிப்பாரா தவெக தலைவர் விஜய்?

13 hours ago 1

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னையில் கடந்த நவம்பர் 30 அன்று கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தவெக தொண்டர்கள் செய்யுமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, பல்வேறு பகுதிகளில் தவெக தொண்டர்கள் களத்தில் இறங்கி பணியாற்றினர்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (டிச.4) சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த 250 குடும்பத்தினரை, பனையூரில் உள்ள தவெக தலைமையகத்துக்கு கட்சி நிர்வாகிகள் அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Read Entire Article