மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதா? சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்

11 hours ago 3

சென்னை,

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வாழ்ந்து மறைந்த பெரிய தலைவர்களை சீமான் கொச்சைப்படுத்துவது சரியல்ல, தலைவர்களை கொச்சைப்படுத்தினால் தன் பெயர் அடையாளப்படும் என்று இவ்வாறு செய்கிறார். கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது தான் நல்லது. தலைவர்களை கொச்சைப்படுத்துவது சீமானுக்கு சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே சென்னையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடியை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமானை கண்டித்து நீலாங்கரையில் அவரது வீட்டை முற்றுகையிட வந்த த.பெ.தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

Read Entire Article