புதுடெல்லி,
மராட்டியம், ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக இன்று 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்தநிலையில் மராட்டியம், ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் இரு மாநிலத்திலும் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
288 இடங்களை கொண்ட மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவைப்படுகிறது. மொத்தம் 81 இடங்களை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 41 இடங்கள் தேவை.
மராட்டியம் கருத்து கணிப்புகள்:-
* மராட்டிய தேர்தலில் பாஜக கூட்டணி 137-157, காங்கிரஸ் கூட்டணி 126-146 மற்றவை 2-8 ரிப்பப்ளிக் செய்தி நிறுவனம்
* மராட்டிய தேர்தலில் பாஜக கூட்டணி 147, காங்கிரஸ் கூட்டணி 136, மற்றவை 5 இடங்கள் பெறும் என சி.என்.என் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி 137 -157, காங்கிரஸ் கூட்டணி 126-146, மற்றவை 2-8 பி-மார்க் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி 150 -170, காங்கிரஸ் கூட்டணி 110 -130, மற்றவை 8-10 இடங்கள் - ஏபிபி மெட்ரிஸ் செய்தி நிறுவனம்
* பீப்பிள் பிளஸ் கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி 175 முதல் 195 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 85 முதல் 112 இடங்களையும், மற்றவை 7 முதல் 12 இடங்களையும் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் பாஜக கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 101, உத்தவ் 95, சரத் பவார் 86 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஜார்கண்ட் கருத்து கணிப்புகள்:-
* பாஜக கூட்டணி 45, காங்கிரஸ் கூட்டணி 33, மற்றவை 3 இடங்கள்: சி.என்.என் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி 42 - 47, காங்கிரஸ் கூட்டணி 25-30, இதர 1-4 இடங்களை பெறலாம்: ஏபிபி மெட்ரிஸ் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி 44-53, காங்கிரஸ் கூட்டணி 25-37, மற்றவை 5-9: பீப்பிள் பிளஸ் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி 40-44, காங்கிரஸ் கூட்டணி 30-40, மற்றவை 1-1 : டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.