மராட்டியத்தில் புதிய அரசு 5-ந் தேதி பதவி ஏற்பு

4 days ago 4

மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியை கண்டபோதிலும், ஒரு வாரத்துக்கு மேலாக ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. கூட்டணியில் அதிக இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதால் முதல்-மந்திரி பதவி ஏற்க பா.ஜனதா விரும்புகிறது.

அதே நேரத்தில் முதல்-மந்திரி ஷிண்டேயின் முகத்தை முன்வைத்தே தேர்தலை சந்தித்ததாகவும், இதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிவசேனாவினர் விரும்பினர். ஆனால் இதனை எற்க பாஜக மறுத்தது. அதன்பிறகு நடத்திய பேச்சுவார்த்தையில் முதல்-மந்திரி பதவியை பா.ஜனதாவுக்கு வழங்க தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

முதல்-மந்திரி பதவியை தங்களுக்கு தராவிட்டால், உள்துறை, நிதி இலாகாக்கள் மற்றும் சபாநாயகர் பதவியை தங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது. ஒருவேளை அப்படி தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க சிவசேனா விரும்புவதாகவும் பா.ஜனதா தலைவர்களிடம் ஷிண்டே கூறியுள்ளார்.அதிகார பகிர்வு விஷயத்தில் பா.ஜனதா மீதான அதிருப்தியால் ஷிண்டே மாநில தலைநகரை விட்டு சொந்த கிராமத்துக்கு சென்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று நேற்று பா.ஜனதா அறிவித்துள்ளது.

Read Entire Article