
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.7.2025) மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.48 கோடியே 17 லட்சம் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.113 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 271 கோடியே 24 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 54,461 பயனாளிகளுக்கு வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
பள்ளிக் கல்வித் துறை சார்பில், திட்டப்படுகை. துளைசேந்திரபுரம், சின்னங்குடி, தாழஞ்சேரி, ஸ்ரீகண்டபுரம், தில்லையாடி, கீழாத்துகுடி, திருமுல்லைவாசல், வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ரூ. 12 கோடியே 26 லட்சம் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள்;
வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், செம்பனார்கோவில் மற்றும் தரங்கம்பாடி ஆகிய இடங்களில் ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் சார்பதிவாளர் அலுவலகங்கள்;
உயர்கல்வித் துறை சார்பில், தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.4 கோடியே 40 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் மற்றும் நூலகம், சீர்காழி வட்டம், புத்தூரில் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.3 கோடியே 40 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கோனேரிராஜபுரம், திருவெண்காடு, காளி, நல்லூர் ஆகிய இடங்களில் ரூ.2 கோடி செலவில் பொது அலகு கட்டடங்கள், தலச்சங்காடு, திருவாடுதுறை, இளையாலூர், கருவாழக்கரை, காரைமேடு, கொற்கை, நெடுவாசல், நெம்மேலி ஆகிய இடங்களில் ரூ. 2 கோடியே 45 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையங்கள், மேலப்பெரும்பள்ளம், முருகமங்கலம், சீர்காழி, புதுப்பட்டினம் ஆகிய இடங்களில் ரூ.3 கோடியே 80 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சீர்காழி அரசு மருத்துவமனையில் ரூ. 60 லட்சம் செலவில் கண் அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டடம்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், மாப்படுகையில் ரூ. 9 லட்சம் செலவில் பொது விநியோகக் கடை, ஆணைகாரன்சத்திரத்தில் சந்தப்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 54 லட்சம் செலவில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடம், பாண்டூர், ஏகோஜிமகாராஜபுரம், மாதானம், வடகால் ஆகிய இடங்களில் ரூ. 52 லட்சம் செலவில் உணவு தானியக் கிடங்குகள், பச்சைப்பெருமாநல்லூர் மற்றும் ஆக்கூர் ஆகிய இடங்களில் ரூ.32 லட்சம் செலவில் அங்கன்வாடிக் கட்டடங்கள், ஓதவந்தான்குடி, திட்டை, செம்மங்குடி ரூ.1 கோடியே 23 லட்சம் செலவில் கிராம செயலகங்கள், கிடங்கல் ஊராட்சியில் ரூ. 43 லட்சம் செலவில் ஊராட்சி அலுவலகக் கட்டடம், சேமங்கலம் ஊராட்சியில் புதுப்பேட்டை அய்வையனார் ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் பாலம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் ரூ. 21 லட்சம் செலவில் இ-சேவை மையக் கட்டடம்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், குத்தாலத்தில் ரூ.3 கோடியே 20 லட்சம் செலவில் 1000 மெ.டன் கொண்ட சேமிப்புக் கிடங்கு; நெடுஞ்சாலைத் துறை சார்பில், மாப்படுகை – கடலங்குடி சாலையில் பழவாற்றின் குறுக்கே ரூ. 7 கோடியே 27 லட்சம் செலவில் பாலம்; என மொத்தம், ரூ. 48 கோடியே 17 லட்சம் செலவில் 47 முடிவுற்றப் பணிகளை முதல்-அமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ. 1 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம், குத்தாலம் பேரூராட்சியில் ரூ. 2 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் விலங்குகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் தார்சாலைப் பணிகள், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் ரூ. 1 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலைப் பணிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், பொறையாறில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், சித்தர்க்காட்டில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அரசு நோய் தடுப்பு மருந்து கிடங்கு;
நீர்வளத் துறை சார்பில், சீர்காழி வட்டம், தென்னாம்பட்டினத்தில் உள்ள பெருந்தோட்டம் ஏரியின் உபரி வாய்க்காலில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கின்ற வகையில் ரூ. 12 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டிலும், பெருந்தோட்டம் கிராமத்தில் செல்லனாற்றில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கின்ற வகையில் ரூ. 31 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டிலும், தரங்கம்பாடி வட்டம், சந்திரபாடி கிராமத்தில் நண்டலாற்றின் குறுக்கே கடல்நீர் உட்புகுவதை தடுக்கின்ற வகையில் ரூ. 50 கோடி மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள கடைமடை நீரொழுங்கிகள்;
குத்தாலம் வட்டம், கடலங்குடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே வாணாதிராஜபுரம் மற்றும் அரையபுரம் வாய்க்காலில் நீர் செல்லும் திறனை மீட்டெடுக்க ரூ. 2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய படுக்கை அணை; நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மயிலாடுதுறை நகராட்சியில் ரூ. 7 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், மயிலாடுதுறை வட்டம், சீனிவாசபுரத்தில் ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் மண் பரிசோதனை நிலையம்; என மொத்தம், ரூ. 113 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 3000 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள், 117 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் இயற்கை மரணம் உதவித் தொகை; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 7000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள், வீடுகளை சீரமைக்க நிதியுதவி, முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் நிதி உதவிகள்; மகளிர் திட்டத்தின் சார்பில், 12,086 பயனாளிகளுக்கு சுயஉதவிக் குழு வங்கி நேரடி கடன், நலிவு நிலை குறைப்பு நிதி, சமுதாய முதலீட்டு நிதி, சுழற்சி முறை கடன்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 25,669 பயனாளிகளுக்கு குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம், இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் திட்டம், வேளாண்மை இயந்திரமாக்கல் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்; தாட்கோ சார்பில், 124 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் நான்கு சக்கர வாகனங்கள், கறவை மாடுகள் வாங்கிட மானியத்துடன் கடனுதவி, நன்நிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் இரண்டு ஏக்கர் நிலம், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள்;
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 167 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், ஸ்மார்ட் போன்கள், காதொலி கருவிகள், செயற்கை கால்கள், மருத்துவ காப்பீடு அட்டைகள்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்; தொழிலாளர் நலன் மற்றம் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 654 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இயற்கை மரண நிதியுதவித் தொகை, ஓய்வூதியம், பணியிட மரண உதவித் தொகை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரிய அட்டைகள்;
மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், 2500 பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் பொருட்டு நுண்கடன் வழங்குதல், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை சார்பில், 202 பயனாளிகளுக்கு சலவைப் பெட்டி, தையல் இயந்திரங்கள், முஸ்லீம் மற்றும் கிறித்துவ மகளிருக்கு நலத்திட்ட உதவிகள், சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள்; மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 1000 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்; கூட்டுறவுத் துறை சார்பில், 1,242 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு, தாட்கோ கடன், மாற்றுத்திறனாளி கடன் உதவி, சிறுபான்மையினர் கடன் உதவி, டாம்கோ கடன், கரும்பு கடன்;
தோட்டக்கலைத் துறை சார்பில், 222 பயனாளிகளுக்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்; கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு 50 சதவிகித மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள்; சமூகநலத்துறை சார்பில், 49 பயனாளிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள்;
என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ. 271 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 54,461 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கினார்.
இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சுதா, சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பன்னீர்செல்வம், நிவேதா எம். முருகன், எஸ்.ராஜ்குமார், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தாட்கோ தலைவர் இளையராஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.