மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1130 கான்ஸ்டபிள்கள்

1 day ago 5

பணி: Constable/Fireman (Male)- 2024.
மொத்த காலியிடங்கள்: 1130.
மாநில வாரியாக உள்ள காலியிடங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம்: ரூ.21,700-69,100. வயது; 30.09.2024 தேதியின்படி 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள் குறைந்த பட்சம் 170 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். (எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 162.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ.யும் இருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் உயரத்திற்கேற்ற எடை மற்றும் ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்).மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை நிறுவனத்தால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடல் திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரி பார்த்தலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.எழுத்துத் தேர்வில் General Intelligence, Reasoning, General Awareness, Maths, English ஆகிய பாடங்களிலிருந்து மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்வித்தாள் அமைந்திருக்கும். தேர்வு எழுத 120 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.உடற்திறன் தேர்வில் ஆண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 6.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். உடற்தகுதி தேர்வில் விண்ணப்பதாரரின் உயரம், உடல் எடை அளவிடப்படும்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.100/-. பெண்கள்/எஸ்சி/எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. இதை ஸ்டேட் வங்கி செலான் மூலம் செலுத்த வேண்டும்.
www.cisfrectt.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2024.

The post மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1130 கான்ஸ்டபிள்கள் appeared first on Dinakaran.

Read Entire Article