![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/09/33636286-arrest1.webp)
இம்பால்,
மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இரண்டு பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காக்சிங் மாவட்டத்தில் உள்ள சுக்னு, சாய்ரல் மற்றும் காக்சிங் குனோ பகுதியில் வசிப்பவர்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, காங்போக்பி மாவட்டத்தில் நேற்று பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். அதில் ஒரு ஹெக்லர், ஜி3 ரைபிள், ஒரு பிஸ்டல், ஒரு 9 மி.மீ பிஸ்டல் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.