மணிகண்டம், ஜன.10: திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் அம்மன் நெற்பயிர்கள் கதிர் அடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. தை மாதம் பிறக்க ஓரிரு நாட்களே உள்ள நிலையில் கதிர் அடிக்கும் பணியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என முன்னோர்களின் வாசகத்திற்கேற்ப தை மாதத்தில் விவசாயிகள் நெற்பயிர்களை கதிர் அடித்து புதிய நெற்கதிர்களை வைத்து பொங்கல் வைத்து சாமியிடம் படைத்து கொண்டாடுவது தமிழர்களின் பாரம்பரிய பொங்கலாக கொண்டாடப்படும். அந்த வகையில் மணிகண்டன் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள அம்மன் நெற்பயிர்கள் கதிர் அடிக்கும் பணியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.
The post மணிகண்டம் பகுதியில் அறுவடை பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.