மசாலா பாக்கெட்டில் போதைப்பொருள் கடத்தல் - அதிர்ச்சி சம்பவம்

5 hours ago 2

காந்தி நகர்,

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக அகமதாபாத் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போதைப்பொருள் மசாலா பாக்கெட்டுகளில் அடைத்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல் கிடைத்தது

இந்நிலையில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் போதைத்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று குஜராத் மாநிலம் அமகமதாபாத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் அமெரிக்காவுக்கு அனுப்பப்படவிருந்த மசாலா பாக்கெட்டுகளில் சுமார் 2 கிலோ மதிப்புப்பள்ள போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

Read Entire Article