மகாவிஷ்ணு விவகாரம்: தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு பணியிட மாற்றம்

2 hours ago 4

சென்னை,

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடை பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசினார். இதனைத்தொடர்ந்து மகா விஷ்ணு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இதனிடையே மகாவிஷ்ணுவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்னதாக மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் விசாரணையில் இறங்கிய பள்ளிக் கல்வித் துறை. அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருவள்ளூர் கோவில் பதாகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரிப் பள்ளித் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இதற்கு தலைமை ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அவர்கள் இருவரையும் மீண்டும் சென்னை மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி தமிழரசி, சண்முகசுந்தரம் முறையே விருகம்பாக்கம், அடையார் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 6-ம் தேதி பணி மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தநிலையில் இருவரும் புதிய பணி இடங்களில் சேராமல் இருந்ததாக கூறப்படுகிறது. 

Read Entire Article