வதோதரா,
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று நடக்கிறது.
இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா விளையாடும். அதேவேளையில் ஆறுதல் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.