மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; 2வது போட்டியில் இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

3 hours ago 5

ராஜ்கோட்,

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த ஆட்டங்கள் ராஜ்கோட்டில் நடக்கிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களம் இறங்கும்.

அதே வேளையில், தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக அயர்லாந்து கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆட்டம் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

Read Entire Article