பேராவூரணி, டிச. 24: பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகளில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். பேராவூரணி ஒன்றியம் காலகம் ஊராட்சி மிதியடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம், பூவாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் மற்றும் பாலத்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கூடுதல் வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்ற பள்ளிகளில் மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி,ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, ஒன்றிய ஆணையர்கள் சாமிநாதன், செல்வேந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் பேராவூரணி வட்டார கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார் ( காலகம்), முருகேசன் ( பூவாளூர்), விஜயா சுப்பிரமணியன் (பாலத்தளி), ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினர்.
The post பேராவூரணி ஒன்றியத்தில் ₹1 கோடியில் 3 பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள் காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.