“பெரியார், அண்ணாவை பழித்தவர்கள் தமிழக அரசியலில் தலையெடுத்தது இல்லை” - ஆர்.எஸ்.பாரதி

4 weeks ago 8

சென்னை: “பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழக அரசியலில் தலையெடுத்தது இல்லை” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இன்று (ஜூன் 24) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “‘ஒரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். வரக்கூடிய ஜூலை 1-ம் தேதி முதல்வர் இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முறைப்படி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்.

Read Entire Article