பெயரை மாற்றிய நடிகை ஆலியா பட்

10 hours ago 3

மும்பை,

பாலிவுட் உலகின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆலியா பட். இவர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள் . 'கங்குபாய் கத்தியவாடி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் ஆலியா பட். இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் 'லவ் அண்ட் வார்' என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆலியா பட், தன்னுடைய பெயரை ஆலியா பட் கபூர் என மாற்றிகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகை ஆலியா பட் பெயரை மாற்றியுள்ள செய்தி மிகவும் வைரலாகி வருகிறது. 

Read Entire Article