பூ மார்க்கெட் பகுதியை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்

2 days ago 4

 

திருப்பூர், டிச. 31: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம், திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி ஸ்மார்ட் சிட்டி தினசரி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பூ மார்க்கெட் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த பூ மார்க்கெட்டை சுற்றிலும் பூ வியாபாரம், பழம் வியாபாரம், மாலை வியாபாரம் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் மார்க்கெட்டை நம்பி உள்ளனர்.

இந்நிலையில், பூ மார்க்கெட்டின் பின்புறம் உள்ள அறிவொளி சாலையில் பூ மார்க்கெட்டில் இருந்து கொட்டப்படக்கூடிய குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் தினம்தோறும் சுத்தம் செய்து தர வேண்டும். தொற்று நோயை உண்டாக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.  மேலும், ஈஸ்வரன் கோவில் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக்கூடிய தள்ளு வண்டிகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். இதில், சங்கத்தின் தலைவர் சுலைமான், செயலாளர் சிவசண்முகம், பொருளாளர் பாலன் மற்றும் பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post பூ மார்க்கெட் பகுதியை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article