புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி கோவிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

1 week ago 4

விருதுநகர்: பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளனர்.

பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்தால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மலையேற சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் வனத்துறையினர் விதித்துள்ளனர்.

The post புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி கோவிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article