புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னை கடற்கரைகளில் பலத்த பாதுகாப்பு

2 days ago 1

சென்னை,

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் பொதுமக்கள் இறங்காதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அங்கு தற்காலிக புற காவல் நிலையங்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் இன்று இரவு ஈடுபட உள்ளனர். மேலும், சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

 

Read Entire Article