டெய்ர் அல் பலா: காசாவில் இஸ்ரேல் ராணுவம் 2 இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 9 பேர் பலியாகினர்.12 பேர் படுகாயமடைந்தனர். கடந்த 2023,அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தி 1,200க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தனர். அதற்கு பழிவாங்கும் விதமாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவரை 45,000 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் பல்வேறு நாடுகளில் புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் நடந்தன. புத்தாண்டு தினத்திலும் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை. காசாவின் ஜபாலியாவில் இஸ்ரேல் குண்டுவீச்சில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.12 பேர் காயமடைந்தனர். புரைஜ் அகதிகள் முகாமில் நேற்று நடந்த தாக்குதலில் ஒரு பெண், குழந்தை பலியானது என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
The post புத்தாண்டிலும் இஸ்ரேல் தாக்குதல் காசாவில் 9 பேர் பலி; படுகாயம் 12 appeared first on Dinakaran.