பிரதமர் மோடிக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

2 days ago 3

சென்னை,

குஜராத் முதல்-மந்திரியாக நான்கு முறையும், நாட்டின் பிரதமராக 3வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மாநில கவர்னர்கள், மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

'நமது மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திரமோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

A very happy birthday to our most respected honourable Prime minister dear Shri @narendramodi ji I pray to god to always bless you with good health and happiness.

— Rajinikanth (@rajinikanth) September 17, 2024

மேலும், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், 

'நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

My best wishes to our Honorable Prime Minister @narendramodi ji on his birthday. May you have a long and healthy life.

— Kamal Haasan (@ikamalhaasan) September 17, 2024
Read Entire Article