பிரதமர் பதவி வாய்ப்புடன் எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் என்னை அணுகினார் - நிதின் கட்கரி..!

5 days ago 6
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன், பிரதமர் பதவி வாய்ப்புடன் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் தன்னை சந்தித்ததாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். நாக்பூரில் பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கு விழாவில் பேசிய அவர், அந்த யோசனையை அப்போதே நிராகரித்ததாக தெரிவித்தார். தாம் ஒரு சித்தாந்தத்தையும், நம்பிக்கையையும் பின்பற்றுவதாகவும், எந்தச் சலுகை காட்டியும் தன்னைக் கவர்ந்திழுக்க முடியாது என்றும் அந்தத் தலைவரிடம் கூறியதாக கட்கரி தெரிவித்தார். தான் சார்ந்துள்ள கட்சி, கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அனைத்தையும் தமக்குக் கொடுத்திருப்பதாக அவரிடம் கூறியதாக கட்கரி தெரிவித்தார்.
Read Entire Article