பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் சேர்ந்து ஆவணங்களை சரி பார்த்து கொள்ள அறிவுரை

3 weeks ago 4

 

கொள்ளிடம்,அக்.26: கொள்ளிடம் பகுதியில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகள் ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா அறிவுரை வழங்கி உள்ளார். இது குறித்து கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படும் பிரதம மந்திரியின் கௌரவ நிதி உதவி திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக பதிவு செய்துள்ள விவசாயிகள் இத்தொகையை பெறுவதற்கு ஏதுவாக வருகிற 24ம் தேதி க்குள் கணினி சிட்டா, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, விவசாயி பெயரில் நிலபட்டா 2019 ம் வருடத்துக்குப்பிறகு மாறியிருப்பின், பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி அலுவலர்கள் அல்லது வட்டார வேளாண்மை அலுவலர்கள் அல்லது உதவி வேளாண்மை இயக்குனர்களை நேரில் சென்று சரிபார்த்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் சேர்ந்து ஆவணங்களை சரி பார்த்து கொள்ள அறிவுரை appeared first on Dinakaran.

Read Entire Article