பிதர்காடு கோவில் அருகே சிறுத்தை ஓடியதால் பக்தர்கள் அச்சம்

1 month ago 6

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிதர்காடு முதரக்கொள்ளி பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது திடீரென சாலையில் சிறுத்தை ஓடுவதை கண்டு அச்சமடைந்தனர்.

சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் சிறுத்தை மீண்டும் சாலை வழியாக ஓடியது. இது கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பிதர்காடு கோவில் அருகே சிறுத்தை ஓடியதால் பக்தர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article