பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் அப்ரன்டிஸ்

1 day ago 5

பயிற்சிகள்:

1. Graduate Apprentice: 16 இடங்கள். உதவித் தொகை ரூ.9,000, தகுதி: CSE/IT/ECE/EEE/Electrical/Mechanical/ Aerospace Engineering/Instrumentation ஆகிய ஏதாவதொரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,
2. Diploma Apprentice: 24 இடங்கள். உதவித் தொகை ரூ.8,000.
தகுதி: Computer Science/IT/Computer Technology/ Electronics/Electrical/Instrumentation/ECE/EEE/Applied Electronics/ Telecommunication/Robotics Electronics/Cinematography/Medical Lab Technology ஆகிய ஏதாவதொரு பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட 2 பயிற்சிகளுக்கும் 2020க்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.பயிற்சியளிக்கப்படும் பாடப்பிரிவுகள், பாட வாரியாக காலியிடப் பகிர்வு விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ/ பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

மேற்குறிப்பிட்ட அப்ரன்டிஸ் பயிற்சியில் சேர விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி பற்றிய விவரங்களை முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அப்ரன்டிஸ் பயிற்சிக்கு வழங்கப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து DRDO நிறுவனத்தை தேர்வு செய்து DRDO இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 07.10.2024.

The post பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் அப்ரன்டிஸ் appeared first on Dinakaran.

Read Entire Article