பாகிஸ்தான்: தூதரக அதிகாரிகளை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் - போலீஸ்காரர் பலி

3 hours ago 4

லாகூர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், ரஷியா, வியட்நாம், போஸ்னியா அண்ட் ஹெர்சிகோவினா, எத்தியோப்பியா, ருவாண்டா, ஜிம்பாவே, இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், போர்ச்சுகல் ஆகிய நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் நேற்று ஆப்கானிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள மலப் ஜபாப் என்ற மலைப்பகுதிக்கு தூதரக அதிகாரிகள் அனைவரும் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். ஜகானாபாத் என்ற பகுதியில் சென்றபோது தூதர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து

கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த கண்ணிவெடி தாக்குதலில் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனம் சிக்கியது. இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். அதேவேளை, இந்த தாக்குதலில் தூதரக அதிகாரிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

Read Entire Article