இலங்கை வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2 hours ago 3

துபாய்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டில் இலங்கை 63 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா (71.67 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும் தொடர்கின்றன.

நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை (50.00 சதவீதம்) ஒரு இடம் உயர்ந்து 3வது இடத்திற்கு வந்துள்ளது. தோல்வியை சந்தித்த நியூசிலாந்து (42.86 சதவீதம்) ஒரு இடம் சரிந்து 4வது இடத்திற்கு சென்றுள்ளது. 5வது இடத்தில் இங்கிலாந்தும் (42.19 சதவீதம்), 6வது இடத்தில் வங்காளதேசமும் (39.29 சதவீதம்) உள்ளன.

7 முதல் 9 இடங்களில் முறையே தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்), பாகிஸ்தான் (19.05 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன. 

India strengthen their #WTC25 Final chances, while Sri Lanka make a push of their own More in the race for the mace #INDvBAN | SLvNZhttps://t.co/39pEWyLAMA

— ICC (@ICC) September 23, 2024
Read Entire Article